செப்டம்பர் 16, தேனாம்பேட்டை (Chennai): காந்தி ஜெயந்தியான அக்.02 அன்று, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில், பிரம்மாண்ட அளவிலான மாநாடு நடத்தப்படுகிறது என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சமீபத்தில் அறிவித்து இருந்தார். அந்த மாநாட்டில் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு கொண்ட அதிமுக உட்பட எந்த கட்சியும் வந்து பங்கேற்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த விஷயத்தில், ஆளும் திமுக அரசுக்கு எதிராக, திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக மாநாடு நடத்துவதாலும், அந்த தகவலை ஊடகத்திற்கு தெரிவித்த பேட்டியின்போது அதிமுக பெயரை உச்சரித்ததாலும் அரசியல்மட்ட எதிர்ப்புகள் கிளம்பின.
திமுக - விசிக பனிப்போர்:
இதனிடையே, நேற்று முந்தினம் திருமாவளவன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "ஆட்சிலும், அதிகாரத்திலும் பங்கு" என்ற தலைப்பில், தான் பேசிய பழைய காணொளி ஒன்றை பதிவிட்டு இருந்தார், இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை உண்டாக்கியதைத் தொடர்ந்து, அவர் வீடியோவை நீக்கி இருந்தார். இந்த விஷயங்கள் திமுக தொண்டர்களிடையே சலசலப்பை உண்டாக்க, அவர்கள் விசிகவுக்கு எதிரான குரலை முன்னெடுத்தனர். ஏற்கனவே ஒவ்வொரு சட்டப்பேரவை, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தலின்போதெல்லாம் விசிக - திமுக இடையே சலசலப்பு உண்டாகி பின் தொகுதிகள் பகிர்ந்தளிப்பு செய்யப்பட்டு வந்தது. இதனால் கூட்டணியில் விசிக - திமுக பிரச்சனையின்றி இருப்பதுபோல இருந்தாலும், அவர்களுக்குள் பனிப்போர் என்பது நிலவி வந்ததாகவே அரசியல்மட்டத்தில் கவனிக்கப்பட்டது.
காரசமான விவாதம்:
இவ்வாறான பரபரப்பு சூழலுக்கு மத்தியில், அடுத்தடுத்த விவாதங்களை விசிக ஆளும் திமுக அரசுக்கு எதிராக கிளப்பி வந்ததால், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், தனது எதிரியான பாமகவை வம்புக்கு இழுத்து, பாமக சாதிக்கட்சி, பாஜகவும் அதே கொள்கைகளை ஒத்த கட்சி என பேசி இருந்தார். இது விசிக-வின் மதுஒழிப்பு மாநாடு பெயரை பல இடங்களுக்கும் கொண்டு சேர்த்தது. இந்த விசயத்திற்கு பதில் அளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன், "பாமக சாதிக்கட்சி என்றால், விசிக நிலை என்ன?" என கேட்டு இருந்தனர். மேலும், அன்புமணி தொடர்ந்து பேசுகையில், "பாமகவைப்போல, திருமாவளவனும் திமுக, அதிமுக என அவரவர் தனித்து ஆட்சிக்கு வர கட்சியை தொடங்கவில்லை. அவரவர் தனிப்பட்ட பாதையில் பயணிக்கிறீர்கள். திமுகவை விசிக நம்பினால் பட்டை நாமம் மட்டுமே மிஞ்சும். பாமகவை இகழ்வுபடுத்தி பேசுவதை இனி அவர் தவிர்க்க வேண்டும். விசிக நடத்தும் மதுஒழிப்பு மாநாட்டுக்கு நாங்கள் வரவேற்பு தெரிவிக்கிறோம். விசிக மதுஒழிப்பு விஷயத்தில் எல்.கே.ஜி தான், நாங்கள் பி.எச்.டி வரை முடித்துள்ளோம்" என கூறி இருந்தார். TATA Motors: ரூ.9000 கோடி செலவில் டாடா ஜாகுவார் கார் உற்பத்தி ஆலை., 5000 பேருக்கு வேலை.. தமிழக இளைஞர்களே தயாராகுங்க.!
திருமாவளவன் - மு.க ஸ்டாலின் நேரில் சந்திப்பு:
இவ்வாறான தொடர் சலசலப்புகளுக்கு மத்தியில், தமிழ்நாட்டில் அரசியல் சூழ்நிலை விசிகவா? திமுகவா? என விவாதத்தை கிளப்பி இருந்தது. இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, பொன்முடி, எம்.பி ஜெகத்ரட்சகன் உட்பட மூத்த திமுக நிர்வாகிகளும் இடம்பெற்று இருந்தனர். இந்த சந்திப்பில் தேசிய அளவிலான மதுவிலக்கு கொள்கையை உருவாக்க மத்திய அரசுக்கு மாநில அரசனை திமுக அழுத்தம் தர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி:
அதேபோல, விசிக நடத்தும் மதுஒழிப்பு மாநாடு, அங்கு இயற்றப்படும் தீர்மானங்களை நிறைவேற்றுதல், அதற்கு மாநில அரசு ஒத்துழைத்தல், மாநாட்டில் திமுக சார்பில் முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்றுக்கொள்ள அழைப்பு விடுத்தல் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், முக்கிய விஷயமாக சமீபத்தில் எழுந்த திமுக - விசிக கருத்தியல் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பேச்சுவார்த்தைகளில் நடத்தப்பட்டு இருந்தது என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணாவின் கோரிக்கையும் இதுவே - திருமாவளவன்:
இதனிடையே, திமுக தலைவர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், "முதல்வர் அமெரிக்க சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு வந்ததற்கு விசிக சார்பில் வாழ்த்து & பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் இருந்த இரண்டு வார காலமும் ஏராளமான நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டார். தமிழக முதல்வருக்கு தமிழர்கள் வரவேற்பு கொடுத்தனர். பலகோடி முதலீடுகள், 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முதல்வரின் இப்பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகியுள்ளது. அத்துடன் அக்.02 அன்று நடைபெறும் மது & போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடத்தவுள்ள நிலையில், 2 முக்கிய கோரிக்கையை பரப்புரையாக மேற்கொண்டு வருகிறோம். அதில், முதலாவதாக அரசு மதுபானக்கடைகளில் விற்பனை இலக்கை படிப்படியாக குறைக்க வேண்டும். இரண்டாவதாக தேசிய அளவில் படிப்படியாக மதுவிலக்கை இந்திய அளவில் மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்பது ஆகும். மருத்துவ காரணங்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் தவிர, நுகர்வுக்கான மருந்துகள் தடை செய்யப்பட வேண்டும். இதுதான் சட்டப்பேரவை உறுப்பு எண் 47. இதனை அண்ணா முன்னிறுத்தி மதுவிலக்கை வலியுறுத்தி இருக்கிறார். Today Gold Sliver Price: ரூ.55 ஆயிரத்தை கடந்தது தங்கத்தின் விலை; இன்றைய தங்கம் & வெள்ளி விலை இதோ.!
திமுக - விசிக விரிசல் இல்லை:
பேரறிஞர் அண்ணா மதுவிலக்கில் உறுதியாக இருந்தார். அதே கருத்தை முத்தமிழறிஞர் கலைஞரும் கொண்டிருந்தார். அதனை பின்பற்றி 75 வது ஆண்டு பவள விழாவை காணும் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், இந்திய அரசுக்கு மதுவிலக்கு தொடர்பான வேண்டுகோளை வலியுறுத்த மனு வழங்கப்பட்டுள்ளது. அதனை படித்துப்பார்த்த முதல்வர் ஸ்டாலின், திமுகவின் கொள்கை மதுவிலக்கு, அதனால், அக்.2 ம் தேதி நடத்தப்படும் மாநாட்டில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் பங்கேற்பார் என உறுதியளித்துள்ளார். மதுவிலக்கு தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நிர்வாக சிக்கலை கருத்தில்கொண்டு படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். சர்ச்சையான ஆட்சி பங்கு விவகாரம் குறித்து முதல்வர் ஏதும் கேட்டுக்கொள்ளவில்லை. அது எங்களின் கோட்பாடு. விசிகவுக்கும், திமுகவுக்கு விரிசல் இல்லை. நாங்கள் கொள்கையில் உறுதியாக இருந்து அதனை முன்னிலைப்படுத்துகிறோம்.
மத்திய அரசுக்கு கோரிக்கை:
நாங்கள் திமுகவுக்கு மதுஒழிப்பு மாநாடு குறித்த விசயத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. எங்களுக்கான கருத்து ஒன்றாக இருப்பதால், நீங்களும் வரவேண்டும் என கூறியுள்ளோம். அதன்படி மூத்த நிர்வாகிகள் வருவார்கள் என முதல்வர் உறுதி அளித்துள்ளார். இது தனிக்கட்சிக்கான, தனிநபருக்கான பிரச்சனை இல்லை. இது மக்களுக்கான பிரச்சனை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் மதுபானக்கடை நடத்துகிறது. அதனை தடுக்க மத்திய அரசுக்கு உரிமை இருக்கிறது. அதனை வைத்து மத்திய அரசு மதுஒழிப்பை கொண்டு வர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்" என பேட்டியில் பேசப்பட்டது.