Dindigul Shocker: பழிக்குப்பழியாக பயங்கரம்.. தாய், மனைவி கண்முன்னே கொடூரமாக வெட்டிக்கொலை.. கத்தி எடுத்தவர் கத்தியால் மரணம்.!

ரௌடி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பழிக்கு பழியாக இளைஞர் அவரின் வீட்டிலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தை மட்டுமல்லாது தமிழ்நாட்டையும் அதிரவைத்துள்ளது.

Dindigul Shocker: பழிக்குப்பழியாக பயங்கரம்.. தாய், மனைவி கண்முன்னே கொடூரமாக வெட்டிக்கொலை.. கத்தி எடுத்தவர் கத்தியால் மரணம்.!
Victim Vinoth | Death File Pic (Photo Credit: @Sriramrpckanna1 X / Pixabay)

ஜூலை 08, திண்டுக்கல் (Dindigul News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, மொட்டணம்பட்டி கிராமம், எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் வினோத். இவரின் மனைவி மஞ்சுளா. தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையே, கடந்த 2020ம் ஆண்டு சுள்ளான் ரமேஷ் என்ற ரௌடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், வினோத் உட்பட பலர் கைது செய்யப்பட்டு இருந்தனர். ஜாமினில் வெளியே வந்த வினோத், தனது உயிருக்கு ஆபத்து என்பதை நன்கு உணர்ந்து திருப்பூரில் வசித்து வந்துள்ளார்.

குடும்பத்தினர் கண்முன் சோகம்:

தனது மனைவி மற்றும் குழந்தைகளை திருப்பூர் அழைத்துச்செல்லலாம் என்ற எண்ணத்தில் வினோத் திண்டுக்கல் வந்துள்ளார். அவர் நேற்று இரவு 9 மணியளவில் வீட்டில் மனைவி, அம்மா, அக்கா, குழந்தைகள் ஆகியோருடன் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அச்சமயம் வீட்டுக்குள் திடீரென புகுந்த கும்பல், குடும்பத்தினர் கண்முன் வினோத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டிச்சாய்த்து கொலை செய்தனர். Mumbai Rains: ஒரேநாள் இரவில் மும்பையை புரட்டியெடுத்த கனமழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.! 

பழிக்குப்பழியாக பயங்கரம்:

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வினோத்தின் மரணத்தை உறுதி செய்ததைத்தொடர்ந்து, உடல் பிரேத பரிசோதனைக்காக மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ரௌடி சுள்ளான் ரமேஷின் கொலைக்கு பழிக்குப்பழியாக சோகம் நடந்தது உறுதியானது.

ஏற்கனவே ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், நேற்று வினோத் கொலை:

கடந்த மே 09, 2020 அன்று பாரதிபுரம், கருப்பசாமி கோவில் பகுதியில் ரௌடி சுள்ளான் ரமேஷ் என்பவர் டைசன் வினோ, ஜான்சன் வினோ, செல்வராஜ், மாயக்கண்ணன், வினோத், அழகர் ஆகியோர் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களின் செல்வராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து, தற்போது வினோத் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். John Cena Retirement: 90 கிட்ஸ்-களின் நாயகன், பார் போற்றிய WWE வீரர் ஜான் சீனா; ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! 

ஒரேநாளில் இரண்டு துயரங்கள்:

இதேபோல, திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த இளைஞர் நெப்போலியன், காதல் விவகாரத்தில் 5 பேர் கும்பலால் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் நண்பர்கள் 5 பேரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விவகாரத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில், காவல்துறையினர் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒரேநாளில் இருவேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து நடந்த பயங்கரங்கள் தமிழகத்தை அச்ச உணர்வில் ஆழ்த்தி இருக்கிறது.

(The above story first appeared on LatestLY on Jul 08, 2024 11:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).