Mumbai Rains (Photo Credit: @ANI X)

ஜூலை 08, மும்பை (Maharashtra News): தென்மேற்கு பருவமழையானது தொடங்கியுள்ள காரணத்தால், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாநிலங்கள் மற்றும் வடக்கு, வடகிழக்கு மாநிலங்கள் நல்ல மழையை சந்தித்து வருகின்றன. அவ்வப்போது திடீர் கனமழையும் புரட்டியெடுத்து வருவதால், ஒருசில நேரம் பெருநகரங்களில் வெள்ளமும் சூழ்ந்துவிடுகிறது. Cracks in Land: நிலங்களில் ஏற்படும் திடீர் விரிசல்; காரணம் என்ன?.. விழிபிதுங்கும் கிராம மக்கள்.! 

சிலமணிநேரங்களில் 150 மி.மீ மழை:

இந்நிலையில், நேற்று ஒரேநாளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையானது கொட்டித்தீர்த்தது. 150 மி.மீ அளவில் பெய்த கனமழை காரணமாக, நகரின் தாழ்வான இடங்கள் மற்றும் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. இதனால் ஒருசில இடங்களில் சுரங்கப்பாதை போக்குவரத்து தடைபட்டது. மும்பை நகரின் நரம்பு போல செயல்பட்டு வரும் மின்சார இரயில் சேவையும் ஆங்காங்கே பாதிக்கப்பட்டன. Terrorists Hid In Bunker: போலியான கபோர்டுக்குள் ரகசிய அறை; பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டின் ரகசியம் உடைத்த இராணுவம்.! 

நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்:

தொடர்ந்து, இன்றைய நாளும் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழைக்கான எச்சரிக்கையை அங்குள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதனால் நகர்ப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் உள்ள நீரை விரைந்து வெளியேற்றி போக்குவரத்தை சீர்படுத்த காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

மும்பையை சூழ்ந்துள்ள மழை மேகங்கள்:

மும்பை கிங்ஸ் சர்க்கிள் பகுதியில் தேங்கியுள்ள மழை நீர்:

நகரின் பல பகுதிகளில் தேங்கிய வெள்ளம்: