Youth Killed in Land Dispute: நிலத்தகராறில் இளைஞரை கத்தியால் குத்திக்கொன்ற பயங்கரம்; அண்ணன்-தம்பி குடும்பத்தில் துயரம்.!

சொத்து மற்றும் வாத்து மேய்த்த தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம் வத்திராயிருப்பு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Youth Killed in Land Dispute: நிலத்தகராறில் இளைஞரை கத்தியால் குத்திக்கொன்ற பயங்கரம்; அண்ணன்-தம்பி குடும்பத்தில் துயரம்.!
Crime Scene with Knife File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 12, கூமாபட்டி (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு, கூமாபட்டி கிராமம், ராமசாமியாபுரம், நடுத்தெருவில் வசித்து வருபவர் குருவையா. இவரின் மகன் வீரகுரு (21). குருவையாவின் அண்ணன் பாலசுப்பிரமணியன். அண்ணன் - தம்பிகள் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. மேலும், வாத்து மேய்ப்பது குறித்தும் வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. Police Open Fire on Robbery Suspects: நாம்பள்ளி ரயில் நிலையம் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் துறையினர்.. ஒருவர் கைது..! 

இருதரப்பு மோதல்:

இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் வீரகுரு தனது வீட்டருகே நின்றுள்ளார். அச்சமயம் அங்கு வந்த பாலசுப்பிரமணியனின் மகன் வீரபாண்டி (20), மருமகன் முனியசாமி (30) ஆகியோர் சேர்ந்து வீரகுருவிடம் தகராறில் ஈடுபட்டு இருக்கின்றனர். அச்சமயம் இருதரப்பும் வாக்குவாதம் செய்துகொண்ட நிலையில், ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி இருக்கிறது. இதனால் இருதரப்பும் கத்தி, தடியால் மாறிமாறி தாக்கிக்கொண்டுள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த வீரகுருவை மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். YouTuber TTF Vasan's Tirupati Temple Video: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்.. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செய்த பிராங்க்.. தேவஸ்தானம் நடவடிக்கை..! 

காவல்துறையினர் விசாரணை:

வத்திராயிருப்பு மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் வீரகுரு வரும் வழியிலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், காயமடைந்த வீரபாண்டி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இந்த விஷயம் குறித்து கூமாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் வீரபாண்டி மற்றும் முனியசாமி ஆகியோரின் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Jul 12, 2024 03:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).