Garlic Prices Hit New High: உச்சம் தொடும் பூண்டு விலை... இனி பூண்டு இல்லாமல் தான் சமையல் செய்யணும் போல..!

இந்தியா முழுவதும் தொடர் மழை காரணமாக பூண்டு விளைச்சல் குறைந்துள்ளதால், பூண்டின் விலை அதிகரித்துள்ளது.

Garlic (Photo Credit: wikipedia)

டிசம்பர் 28, சென்னை (Chennai): சென்னை கோயம்பேடு சந்தைக்கு வெளி மாநிலங்களிலிருந்து வரும் பூண்டு அளவு குறைந்ததால் அதன் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. நாட்டு பூண்டு விலை கிலோ ரூ260க்கும், சைனா பூண்டு கிலோ 340க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூண்டு விலை உயர்வால் பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டில் தேவையை குறைத்து பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ED Raids: சென்னையில் அதிரடி... அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் பல இடங்களில் சோதனை..!

காய்கறிகளின் விலை: மேலும் தக்காளி கிலோ 28 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 50 ரூபாய்க்கும், முருங்கக்காய் 120க்கும், பீர்க்கங்காய் 44, சுரைக்காய் 30, புடலங்காய் 40, பாகற்காய் 60 முதல் 100 வரையிலும், பச்சை மிளகாய் 45, உருளை 36, முள்ளங்கி 40, கத்தரி 50 முதல் 80 ரூபாய் வரையிலும், வெண்டைக்காய் 60 ரூபாய்க்கும், பீன்ஸ் 50, அவரை 70 முதல் 110 வரையிலும், கேரட் 40, மாங்காய் 60 முதல் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement