நவம்பர் 05, ஆக்லாந்து (Sports News): வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20ஐ போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டி20ஐ போட்டி, இன்று (நவம்பர் 05) ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். PAK Vs SA, 1st ODI: பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. பாகிஸ்தான் த்ரில் வெற்றி..!
நியூசிலாந்து எதிர் வெஸ்ட் இண்டீஸ் (New Zealand Vs West Indies):
அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 164 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷாய் ஹோப் 53 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து சார்பில் ஜகரி ஃபௌல்க்ஸ் மற்றும் ஜேக்கப் டஃபி தலா 2, கைல் ஜேமிசன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 157 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக தனி ஆளாக போராடிய கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 28 பந்தில் 55* ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ரோஸ்டன் சேஸ் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இப்போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி வீரர்கள்:
டிம் ராபின்சன், டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), ஜகரி ஃபௌல்க்ஸ், கைல் ஜேமிசன், ஜேக்கப் டஃபி.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:
ஷாய் ஹோப் (கேப்டன்), அலிக் அதானாஸ், பிராண்டன் கிங், ரோஸ்டன் சேஸ், அக்கீம் அகஸ்டே, ரோவ்மேன் பவல், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், மேத்யூ ஃபோர்டே, அகேல் ஹொசைன், ஜெய்டன் சீல்ஸ்.