Salem Minor Girl Rape: 15 வயது சிறுமியை 5 மாத கர்ப்பிணியாக்கிய 15 வயது சிறுவன்.. படிப்பதாக கூறி வீட்டிலேயே உல்லாசம்.. பதறிப்போன பெற்றோர்.!

ஆன்லைன் உலகில் பல ஆபத்தான விஷயங்கள் நிறைந்து கிடக்கின்றன. அவற்றில் நன்மை, தீமைகளை நாம் தெரிந்துகொள்ளாத பட்சத்தில் நாம் அதனால் ஏற்படும் விளைவுகளை கட்டாயம் சந்தித்தே ஆகவேண்டும். இதில் வயது வித்தியாசம் இல்லை.

Minor Girl Abused | Teenage Love Couple File Picture (Photo Credit: Siasat.com / WikiHow)

மார்ச் 16, அம்மாபேட்டை (Salem News): சேலம் (Salem) மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி (Minor Girl), மாநகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவருக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டு இருக்கிறது. வயிற்று வலியால் துடித்த சிறுமியை பெற்றோர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்தபோது, அவர் 5 மாத கர்ப்பிணியாக இருப்பது உறுதியானது. இந்த தகவலை மருத்துவர்கள் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார். அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கவே, நேரில் வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் பல பரபரப்பு தகவல் வெளியாகின. சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் 15 வயது சிறுவனும் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சிறுவன் அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு சென்று வந்த நிலையில், மாணவிக்கும் - மாணவருக்கும் இடையே பழக்கமானது ஏற்பட்டுள்ளது. Cannabis Youngsters Atrocity: கஞ்சா போதை ரௌடிகளால் கடையை மூடிய உரிமையாளர் – அரக்கோணத்தில் பகீர் சம்பவம்..!

இவர்கள் இருவரும் ஒரே வகுப்பு பயின்று வருவதால், பாடம் பற்றுவிப்பது தொடர்பாக சந்தித்துக்கொள்வார்கள் என பெற்றோரும் நம்பிக்கையின் பேரில் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். நாளடைவில் இவர்களின் பழக்கம் எல்லை மீறி தனிமையில் இருந்து உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பமாகியுள்ள உண்மை தெரியவந்துள்ளது.

Rape Representational Image (Photo Credit: PTI)

இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி சிகிச்சையில் இருக்கிறார்.

அவரின் கருவை கலைப்பது தொடர்பான ஆலோசனையில் சிறுமியின் பெற்றோர்கள், மருத்துவர்கள், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பிரதி மாதம் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறவுள்ள நிலையில், அதிகாரிகள் முடிவு எடுக்க இயலாமல் திணறி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றளவில் இளம் வயதுள்ள குழந்தைகளிடையே செல்போன் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆகையால், அவர்களுக்கு சிறுவயதில் இருந்தே செல்போனின் நன்மை, தீமை குறித்து விவரித்து வளர்க்க வேண்டும். அவர்கள் செல்போனில் பார்ப்பதை அவ்வப்போது பெற்றோர்கள் சோதிக்க வேண்டும். Bikers Atrocity Ends: காரில் சென்றவர்களை இடைமறித்து ரகளை செய்த கும்பல்.. தூக்கி உள்ளே வைத்து பாடம் புகட்டிய காவல்துறை.! 

சிறார்கள் இளம் வயதிலேயே செல்போனில் மூழ்கி ஆபாச படங்கள் பார்ப்பது போன்றதன் விளைவே இவ்வாறான சோகங்களுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now