Mother And Daughter Suicide: 13 வயது பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - அதிர்ச்சியில் தாயும் தற்கொலை..!

தாய் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று கண்டித்ததால் மகள் தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்த தாயும் துக்கம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சிவகாசியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mother And Daughter Suicide: 13 வயது பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - அதிர்ச்சியில் தாயும் தற்கொலை..!
Suicide File Pic (Photo Credit: Pixabay)

மார்ச் 30, சிவகாசி (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே மாரனேரி அம்மாபட்டியில் வசித்து வரும் தம்பதி பாலமுருகன்-பாப்புக்குட்டி (வயது 41). இத்தம்பதிகளுக்கு ஐஸ்வர்யா (வயது 17), இந்துமதி (வயது 13) என்ற இரண்டு மகள்களும், அருண்குமார் (வயது 10) என்ற ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் மூவரும் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். People Died After Consuming Banned Medicine: அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகளை சாப்பிட்ட 5 பேர் பலி – 100 பேருக்கு தீவிர சிகிச்சை..!

இந்நிலையில், மாணவி இந்துமதி கடந்த சில தினங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். அவருடைய தாயார் அவரிடம் பள்ளிக்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதனால், மனஉளைச்சல் அடைந்த மாணவி இந்துமதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை (Schoolgirl Hanging Suicide) செய்துகொண்டுள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த அவருடைய தாயார், மகள் இந்துமதி தூக்கில் தொங்கி இறந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், இதுகுறித்து அவருடைய கணவருக்கு செல்போன் மூலம் தகவல் அளித்து, தானும் தற்கொலை செய்துகொள்ள போகிறேன் எனக் கூறியுள்ளார். உடனடியாக வீட்டிற்கு வந்த பாலமுருகன், தனது மனைவியும் மகளும் தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதுள்ளார்.

இதுதொடர்பாக, தகவல் அறிந்து வந்த மாரனேரி காவல்துறையினர், தாய் மற்றும் மகளின் உடல்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

(The above story first appeared on LatestLY on Mar 30, 2024 01:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).