Su Venkatesan Victory: தமிழ்நாட்டில் முதல் வெற்றியை உறுதி செய்தது திமுக கூட்டணி.. மதுரை தொகுதி சு. வெங்கடேசன் அபார வெற்றி.!

18வது மக்களவை தேர்தலில் மதுரை தொகுதியில் திமுக கூட்டணி ஆதரவு வேட்பாளராக களமிறங்கிய சு வெங்கடேசன், 1.89 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார்.

Su Venkatesan (Photo Credit: @SuVe4Madurai X)

ஜூன் 04, மதுரை (Madurai News): 18வது மக்களவை பொதுத்தேர்தல் முடிவுகள், ஜூன் 04ம் தேதியான இன்று வெளியாகிறது. 8,320 வேட்பாளர்கள் 543 தொகுதியில் போட்டியிட்டு மக்களின் முடிவை எதிர்நோக்கி இருக்கின்றனர். இன்று காலை முதலாகவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பாஜக மட்டும் தனியே 240+ தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில், கூட்டணியுடன் சேர்த்து 293+ தொகுதிகளை கடந்து முன்னிலை வகிக்கிறது. MK Stalin Wish to Chandrababu Naidu: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு - தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து..! 

40 தொகுதிகளும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வசம்: காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 233+ தொகுதிகளை கடந்து முன்னிலையில் இருக்கிறது. 17 தொகுதிகளில் பிற கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. தர்மபுரி தொகுதியில் பாஜக - பாமக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த நிலையில், தற்போது 18வது சுற்றில் திமுக வேட்பாளர் மணி சௌமியாவை விட 17000 + வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் 40 தொகுதியிலும் திமுக தமிழ்நாட்டில் முன்னிலை பெற்றுள்ளது.

சு. வெங்கடேசன் வெற்றி: இந்நிலையில், திமுக கூட்டணி சார்பில் சிபிஐஎம் கட்சியின் வேட்பாளராக மதுரை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் சு.வெங்கடேசன் 1.89 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக ராம சீனிவாசனை விட கூடுதல் வாக்குகள் பெற்று அபார வெற்றி அடைந்தார். இந்த வெற்றியை திமுக-சிபிஐஎம் கட்சியினர் கொண்டாடி  வருகின்றனர்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement