ஜூன் 04, திருப்பதி (Andhra Pradesh News): ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய 18வது இந்தியா தேர்தல்கள் 2024 , ஏழுகட்டமாக நடைபெற்று முடிந்து இன்று முடிவுகள் வெளியாகி வருகிறது. மதியம் 03:40 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 295 தொகுதியிலும், காங்கிரஸ் கூட்டணி 231 தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. மக்களவை தேர்தலுடன் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்திற்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.
ஆந்திரப்பிரதேசம் சட்டப்பேரவை நிலவரம்: இந்நிலையில், ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி - ஜனசேனா - பாஜக கூட்டணி கட்சிகள் 150+ இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் ஆளும்கட்சியாக இருந்து வந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 17+ தொகுதியில் முன்னிலையில் இருக்கிறது.ஆந்திர மாநிலத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என தெலுங்கு தேசத்துடன் மாநில அளவில் பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா தளம் கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டன. இதனால் தற்போது ஆந்திராவில் பெரும்பான்மை வாரியாக தெலுங்கு தேசம் - ஜனசேனா - பாஜக வெற்றி அடைந்து ஆட்சி மாற்றம் உறுதியாகியுள்ளது. Lok Shaba Elections 2024: கூட்டணிக்கட்சி தலைவர்களை டெல்லிக்கு அழைத்தது பாஜக, காங்கிரஸ் தலைமை..! ஜேபி நட்டா தலைமையில் முக்கிய ஆலோசனை.!
முடிவுக்கு வரும் ஜெகன்மோகன் ஆட்சி: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண், பாஜக தலைமையில் அங்கு கூட்டணி ஆட்சி நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் நீண்ட போராட்டத்திற்கு பின் ஆட்சியை பிடித்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவிலான ஏமாற்றமாக அமைந்துள்ளது. இதனால் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வருகிறது.
பிரதமர் மோடி & தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் அம்மாநிலத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வரும் 09ம் தேதி அவர் முதல்வராக பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வாழ்த்துக்களை ஆந்திர பிரதேசம் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில், ஆந்திரப்பிரதேசம் மாநிலம் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றியை எதிர்நோக்கி ஆட்சியை அமைக்கவுள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு அப்பாற்பட்ட நெருங்கிய நண்பர்களாக இருவரும் இருந்து வரும் நிலையில், அதன் அடிப்படையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Congratulations @ncbn garu and @JaiTDP for the resounding victory in the Andhra Pradesh Assembly elections!
May your leadership bring prosperity and progress to Andhra Pradesh, fulfilling the hopes and dreams of its people.
— M.K.Stalin (@mkstalin) June 4, 2024