Driver Dies By Heart Attack: தன் உயிர் போகும் முன், 20 பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய ஓட்டுநர்; சம்பவ இடத்திலேயே நேர்ந்த சோகம்..!
திருப்பூரில் பள்ளி வாகனத்தை ஓட்டும்போது ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்ட சூழலில், 20 பள்ளி குழந்தைகளையும் பத்திரமாக காப்பாற்றிவிட்டு, அவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 25, வெள்ளக்கோவில் (Tirupur News): திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் மலையப்பன். இவர், வெள்ளக்கோவில் பகுதியில் அய்யனூர் அருகேயுள்ள தனியார் பள்ளி ஒன்றில், பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனத்தை (School Bus) ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை 20 பள்ளி குழந்தைகளை வேனில் ஏற்றி சென்றுள்ளார். அப்போது, கோயம்புத்தூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருக்கும்போது, மலையப்பனுக்கு திடீரென நெஞ்சு வலி (Heart Attack) ஏற்பட்டு மிகவும் அவதிபட்டுள்ளார். Teenager Murder: கை துண்டித்து, தலை சிதைக்கப்பட்டு கொடூர கொலை; விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
உடனே, அவர் பள்ளி வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, வண்டியில் ஸ்டீரிங்கில் மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து, பள்ளி குழந்தைகளும் மற்றும் வாகனத்தில் உதவியாளராக இருந்த அவரது மனைவியும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அங்குள்ள காவல்துறையினரின் உதவியோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 25, 2024 06:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

