Minor Girl Kidnap: 17 வயது சிறுமியை கடத்தி சென்ற பேருந்து நடத்துனர் கைது..!

நாகப்பட்டினத்தில் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர், 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றபோது காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

Kidnap (Photo Credit: Pixabay)

ஜூன் 06, வேதாரண்யம் (Nagapattinam News): நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை, தில்லைவிளாகம் பகுதியை சேர்ந்த தனியார் பேருந்து நடத்துனரான (Bus Conductor) பாலசுப்பிரமணியன் (வயது 31) என்பவர் கடத்திச் சென்று விட்டதாக, வேதாரண்யம் காவல்நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியன் சிறுமியை கடத்தி சென்றுள்ளாரா (Kidnapping) அல்லது இருவரும் காதலித்து ஊரை விட்டு சென்றார்களா என்று விசாரணை மேற்கொண்டனர். Redmi A3x: ரெட்மி A3x ஸ்மார்ட் போன் உலகளாவிய இணையதளத்தில் வெளியீடு..! விவரம் உள்ளே..!

இதனிடையே, இவர்கள் இருவரும் ஈரோடு அருகே ரயிலில் பயணித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக, ஈரோடு ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ரயில்வே காவல்துறையினர் ஈரோடு ரயில்நிலையத்திற்கு சென்று, ரயில் நின்றபோது சோதனை நடத்தினர். அதில், அவர்கள் 2 பேரையும் பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் வேதாரண்யம் காவல்துறையினர் ஆகியோர் ஈரோடு சென்று சிறுமியையும், பாலசுப்பிரமணியை அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற பாலசுப்பிரமணியனை காவல்துறையினர் கைது செய்தனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement