Gold Silver Price: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ..!
சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.64,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மார்ச் 04, சென்னை (Chennai News): உலகளவில் நடைபெறும் போர்கள், அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தக முதலீடுகள், பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது கணிசமாக உயர்வை சந்தித்து இருக்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்த நிலையில், தற்போது ரூ.65 ஆயிரம் நோக்கி செல்கிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிவை சந்தித்து வந்தது. ஆனால், மார்ச் 04ஆம் தேதியான இன்று செவ்வாய்க்கிழமை, தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. Gold Silver Price: தங்கம் விலையில் மாற்றமில்லை.. இன்றைய விலை நிலவரம் என்ன..?
தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):
இன்று (மார்ச் 04) 22 கேரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, கிராம் தங்கம் ரூ.8,010க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி (Silver) விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.107க்கும், வெள்ளி கிலோ ரூ.1,07,000க்கு விற்கப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on Mar 04, 2025 10:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

