
மார்ச் 03, சென்னை (Chennai News): உலகளவில் நடைபெறும் போர்கள், அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தக முதலீடுகள், பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது கணிசமாக உயர்வை சந்தித்து இருக்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்த நிலையில், தற்போது ரூ.65 ஆயிரம் நோக்கி செல்கிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது. மார்ச் 03ஆம் தேதியான இன்று திங்கட்கிழமை, தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை. TN 12th Public Exams 2025: பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவக்கம்; தேர்வு எழுதும் 8 லட்சம் மாணவர்கள்.. கண்காணிப்பு பணிகள் தீவிரம்..!
தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):
இன்று (மார்ச் 03) 22 கேரட் தங்கத்தின் (Gold) விலையில் மாற்றம் ஏதுமில்லாமல், கிராம் தங்கம் ரூ.7,940க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ரூ.63,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி (Silver) விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.106க்கும், வெள்ளி கிலோ ரூ.1,06,000க்கு விற்கப்படுகிறது.