Gold Silver Price: வாரத்தின் முதல் நாள் தங்கம் விலை சரிவு.. இன்றைய விலை நிலவரம் இதோ..!
சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.80 சரிந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.65,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மார்ச் 17, சென்னை (Chennai News): உலகளவில் நடைபெறும் போர்கள், அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தக முதலீடுகள், பொருளாதார பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை கணிசமாக உயர்வை சந்தித்து இருக்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்த நிலையில், தற்போது ரூ.65 ஆயிரத்தை தொட்டுள்ளது. இந்நிலையில், மார்ச் 17ஆம் தேதியான இன்று திங்கட்கிழமை, தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. வானிலை: ஒருசில இடங்களில் கொளுத்தி எடுக்கப்போகும் வெயில்; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):
இன்று (மார்ச் 17) 22 கேரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.10 சரிந்து, கிராம் தங்கம் ரூ.8,210க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.80 சரிந்து, ஒரு சவரன் ரூ.65,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி (Silver) விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, வெள்ளி ஒரு கிராம் ரூ.113க்கும், வெள்ளி கிலோ ரூ.1,13,000க்கு விற்கப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on Mar 17, 2025 11:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

