
மார்ச் 16, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப்பொறுத்தவரையில், "தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி திற்பரப்பு பகுதியில் 3 செமீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 37.2° செல்சியஸ், குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 20.0° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இன்றைய வானிலை & நாளைய வானிலை (Today Weather & Tomorrow Weather):
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 16-03-2025 இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17-03-2025 முதல் 22-03-2025 வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். Coimbatore Shocker: 1 வயது குழந்தை ரூ.1 இலட்சத்துக்கு விற்பனை; கள்ளக்காதலில் பிறந்த குழந்தையால் தாய் விபரீதம்.!
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
16-03-2025 முதல் 20-03-2025 வரையில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
16-03-2025 முதல் 20-03-2025 வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை வெப்பநிலை வானிலை (Chennai Weather Today) மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast Today):
இன்று (16-03-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (17-03-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.