Gold Silver Price: வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!
சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.64,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிப்ரவரி 24, சென்னை (Chennai News): உலகளவில் நடைபெறும் போர்கள், அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தக முதலீடுகள், பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது கணிசமாக உயர்வை சந்தித்து இருக்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்து இருந்த நிலையில், தற்போது ரூ.65 ஆயிரம் நோக்கி செல்கிறது. இந்நிலையில், பிப்ரவரி 24ஆம் தேதியான இன்று திங்கட்கிழமை, தங்கத்தின் விலை சற்று உயர்வை கண்டுள்ளது. வானிலை: அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):
தங்கத்தின் விலை உயர்ந்தாலும், அதனை வாங்கும் மக்களின் எண்ணிக்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. இந்நிலையில், இன்று (பிப்ரவரி 24) 22 கேரட் தங்கத்தின் (Gold) விலை ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.8,055க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் விலை ரூ.80உயரந்து, இன்று ரூ.64,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி (Silver) விலையில் மாற்றமில்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.108க்கும், வெள்ளி கிலோ ரூ.1,08,000க்கு விற்கப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on Feb 24, 2025 10:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

