Gold Price Today: ஒரேநாளில் உச்சக்கட்டம்.. சவரனுக்கு ரூ.2200 உயர்வு.. உச்சக்கட்டத்தில் இன்றைய தங்கம் விலை..!
சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கம் சவரன் ரூ.74,320 க்கு விற்கப்படுகிறது.
ஏப்ரல் 22, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனை, இந்திய முதலீட்டு சந்தையையும் கடுமையான அளவு பாதித்துள்ளது. இது இந்தியாவில் தங்கத்தின் விலையில் நேரடியாக பிரதிபலித்து, தங்கத்தின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த சில வாரங்கள் வரை ரூ.65 ஆயிரத்தில் இருந்து மெல்ல உயரத்தொடங்கிய தங்கம் இன்று ரூ.74 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. உலகளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு காரணமாக, சவரன் தங்கத்தின் விலை சில ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவருகின்றன. பொண்டாட்டி கூட சேர்ந்து வாழுப்பா.. அறிவுரை கூறிய பெண் குத்திக்கொலை.. இளைஞர் வெறிச்செயல்.!
தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):
இந்நிலையில், இன்று சவரன் தங்கத்தின் விலை ரூ.74,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.9,290 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோ ரூ.1,12,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையில் இருந்து தங்கம் சவரனுக்கு ரூ.2200 மற்றும் கிராமுக்கு ரூ.275 என்ற அளவில் இன்று உயர்ந்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Apr 22, 2025 09:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

