Gold Silver Price: கிடுகிடுவென குறைந்த தங்கம் விலை.. அசத்தல் வாய்ப்பு.. இன்றைய தங்கம் விலை இதோ.!
அட்சய திருதியை முன்னிட்டு 2 நாட்கள் குறைந்திருந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் லேசான சரிவை சந்தித்து இருக்கிறது.
மே 1, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனை, இந்திய முதலீட்டு சந்தையையும் கடுமையான அளவு பாதித்துள்ளது. இது இந்தியாவில் தங்கத்தின் விலையில் நேரடியாக பிரதிபலித்து, தங்கத்தின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. சென்னையில் ரூ.74 ஆயிரத்தை தாண்டியும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. உலகளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு காரணமாக, சவரன் தங்கத்தின் விலை சில ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவருகின்றன. Hashim Musa: பாகிஸ்தான் ராணுவத்தில் பணி.. பஹல்கம் தாக்குதல் பயங்கரவாதி குறித்து அதிர்ச்சி தகவல்.!
தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):
இந்நிலையில், இன்று சவரன் தங்கத்தின் விலை ரூ.70,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.8,775 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோ ரூ.1,09,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையில் இருந்து தங்கம் சவரனுக்கு ரூ.1640 என்ற அளவில் இன்று குறைந்துள்ளது. கிராம் தங்கம் இன்று ரூ.205 குறைந்துளளது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.2000 குறைந்துள்ளது.
(The above story first appeared on LatestLY on May 01, 2025 10:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

