Gold Silver Price: தங்கத்தின் விலை இன்று உச்சக்கட்டம்.. ஒரேநாளில் ரூ.640 உயர்வு.. இன்றைய தங்கம் விலை இதோ.!

வெள்ளியின் விலை இன்று ரூ.1,00,000 க்கும், தங்கத்தின் விலை ரூ.640 என்ற அளவிலும் உயர்ந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை இன்று ரூ.58 ஆயிரத்தை கடந்துவிட்டது.

Gold Silver Price: தங்கத்தின் விலை இன்று உச்சக்கட்டம்.. ஒரேநாளில் ரூ.640 உயர்வு.. இன்றைய தங்கம் விலை இதோ.!
Gold Silver Price (Photo Credit: Pixabay)

ஜனவரி 03, சென்னை (Chennai News): இந்தியாவில் தங்கத்தின் மீதான நுகர்வு, மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக விலை உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு, நாடுகளுக்கு இடையேயான போர், பதற்ற சூழ்நிலை காரணமாகவும், தங்கத்தின் விலை என்பது கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. Kathir Anand: வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..! 

இன்றைய தங்கம் விலை (Today Gold Price in Chennai):

நேற்று (02 ஜனவரி 2024) சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.57,440 க்கு விற்பனை செய்யப்பட்டது, கிலோ வெள்ளி ரூ.99,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று சவரன் தங்கத்தின் விலை ரூ.640 உயர்ந்து, ரூ.58,080 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.7,260 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில், வெள்ளியின் விலை இன்று கிலோ ரூ.1000 உயர்ந்து, இன்றைய வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,00,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Jan 03, 2025 09:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).