Kathir Anand with MK Stalin & Duraimurugan | File Pic (Photo Credit: @dmkathiranand X)

ஜனவரி 03, காட்பாடி (Vellore News): கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல், வேலூர் மக்களவைத் தொகுதியில் களமிறங்கிய திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் (Kathir Anand), வேட்பாளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. இதன்பேரில் நடந்த சோதனையில், கதிர் ஆனந்துக்கு நெருக்கமாக இருக்கும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு, காட்பாடியை சேர்ந்த திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் (Poonjolai Srinivasan) வீடு, கதிர் ஆனந்த் வீடு, அவரின் கல்லூரிகளில் அதிரடி சோதனை நடைபெற்றது. அப்போது, ரூ.11 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் குறித்து உரிய விளக்கம் கிடைக்கவில்லை. இதனால் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. தொடர்ந்து இதுகுறித்த விசாரணை நடைபெற்று வந்தது. ED Raid: திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு..! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.! 

திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் சோதனை:

இந்நிலையில், திமுக எம்.பி கதிர் ஆனந்த்தின் காட்பாடி வீட்டில் இன்று அமலாக்கத்துறை (ED Raid) சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மாநில அமைச்சர் துரைமுருகனின் மகன், வேலூர் மக்களவை தொகுதி எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில், சி.ஆர்.பி.எப் அதிகாரிகளின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. அதேபோல, கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடைபெறுகிறது என கூறப்படுகிறது. சுமார் 10 க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு உண்டாகி இருக்கிறது. Pattukkottai: நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்.. முந்திச்செல்ல முயன்ற அரசுப்பேருந்தால் எமனை நேரில் பார்த்த சம்பவம்.! 

Poonjolai Srinivasan | DMK Logo (Photo Credit: @VGKUMAR05555120 / @Arivalayam X)
Poonjolai Srinivasan | DMK Logo (Photo Credit: @VGKUMAR05555120 / @Arivalayam X)

சோதனை முடிந்ததும் அறிவிப்பு:

முன்னதாக, இன்று காலை திமுக பிரமுகரான காட்பாடியைச் சேர்ந்த பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் சோதனை அதிகாலை முதல் நடைபெறுகிறது. இவரின் மனைவி வேலூர் மாநகராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டு கைப்பற்றப்பட்ட பணம் குறித்து வருமான வரித்துறை சோதனை நிறைவுபெற்ற நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதே வழக்கில் மேற்படி துப்பு கிடைக்கிறதா? என சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனையின் முடிவுக்கு பின்னரே அமலாக்கத்துறை சார்பில் கைப்பற்றப்பட்ட ஆவணம் குறித்து அடுத்தகட்ட தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.