Gold Silver Price: தங்கம் விலை தொடர்ந்து சரிவு.. இன்று சவரனுக்கு ரூ.480 குறைவு..!
தொடர்ந்து உச்சத்தை நோக்கி பயணித்து வந்த தங்கத்தின் விலை சில நாட்களாக இறங்கு முகத்தை சந்தித்துள்ளது. இதனால் நகை வாங்க நினைத்தவர்கள் கடைகளுக்கு அதிகம் சென்று வருகின்றனர்
ஏப்ரல் 08, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனை, இந்திய முதலீட்டு சந்தையையும் கடுமையான அளவு பாதித்துள்ளது. இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை என்பது தொடர்ந்து அதிகரித்து இருந்தது. ரூ.68 ஆயிரத்தை தாண்டியும் தங்கம் விலை பதிவானது. உலகளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு காரணமாக, சவரன் தங்கத்தின் விலை சில ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவருகின்றன. 5-Month-Old Baby Killed: குழந்தையின் மீது பாசத்தை திருப்பிய கணவர்.. தாயின் பதறவைக்கும் கொடூரம்.. அதிர்ச்சி வாக்குமூலம்.!
தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):
இந்நிலையில், இன்று சவரன் தங்கத்தின் விலை ரூ.65,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.8,225 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோ ரூ.102000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 68,000ஐ கடந்து இருந்த தங்கம் விலை, கடந்த 3 நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்றைய விலையில் இருந்து தங்கம் சவரனுக்கு ரூ. 480 மற்றும் கிராமுக்கு ரூ.60 என்ற அளவில் இன்று குறைந்துள்ளது. தங்கம் வாங்க நினைத்தோர் இவ்வாய்ப்பை பயன்படுத்தலாம். அதேபோல வெள்ளி இன்று கிலோவுக்கு ரூ.1,02,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on Apr 08, 2025 09:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

