Keeranur 5 Month Baby Killed by Mother Case (Photo Credit: @Dinathanthi X / Pixabay)

ஏப்ரல் 08, கீரனூர் (Pudukkottai News): புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர், கண்ணங்குடி பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 31). இவரின் மனைவி லாவண்யா (வயது 20). தம்பதிகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்து, இருவருக்கும் 5 மாத ஆண் கைக்குழந்தை இருக்கிறது. குழந்தைப்பேறுக்கு பின்னர் கணவன் - மனைவி இடையே தகராறு இருந்து வந்துள்ளது. மேலும், குழந்தைக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கும்-வீட்டுக்கும் அழைத்து இருக்கின்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் பிஞ்சு (Pudukkottai 5 Month Old Baby Murder Case):

தொடர் குடும்பச்சண்டை மற்றும் குழந்தையின் மருத்துவ போக்குவரத்து காரணமாக லாவண்யா புலியூரில் இருக்கும் தனது அம்மா பொன்னாயிருப்பு (வயது 42) வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 6ம் தேதி அன்று மர்ம நபர்கள் லாவண்யாவின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பார்த்துக்கொண்டு குழந்தை தூக்கி ஓடுவதாக கூக்காலிட்டார். இதனால் பதறிப்போன அக்கம் பக்கத்தினர் திரண்டனர். மேலும், வீட்டின் தண்ணீர் பேரலில் குழந்தை உயிரற்று கிடந்தது. KN Nehru: அமைச்சர் கே.என் நேருவின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. குவியும் தொண்டர்கள்.. பரபரப்பில் அரசியல் வட்டாரம்.! 

குற்றத்தை ஒப்புக்கொண்ட தாய்:

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த கீரனூர் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து குழந்தையின் உடலை மீட்டனர். மேலும், மணிகண்டன், லாவண்யா, பொன்னாயிருப்பு ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை நடந்தது. இதில் லாவண்யா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த விஷயம் குறித்து பெண் பரபரப்பு வாக்குமூலமும் அளித்துள்ளார்.

பரபரப்பு வாக்குமூலம்:

திருமணத்துக்கு பின்னர் மனைவியின் மீது பேரன்பு வைத்திருந்த மணிகண்டன், மனைவிக்கு குழந்தை பிறந்த பின்னர் அன்பை மடைமாற்றி இருக்கிறார். இதனால் தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டத் தொடங்கிய நிலையில், தன் மீது கணவர் அன்பு காண்பிக்க குழந்தையே தடையாக இருக்கிறது என லாவண்யா எண்ணி இருக்கிறார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் குழந்தையை தண்ணீர் பேரலுக்குள் போட்டு கொலை செய்துள்ளார். மேலும், தாலி சங்கிலியை மறைத்து வைத்து அக்கம் பக்கத்தினரிடம் நாடகமாடியதும் அம்பலமாகியுள்ளது. விசாரணையில் உண்மையை கண்டறிந்த காவல்துறையினர், பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.