Gold Silver Price: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? விபரம் இதோ.!
ரூ.60 ஆயிரத்தை நோக்கி நகர்ந்து வரும் தங்கத்தின் விலை, இன்று மாற்றம் இன்றி தொடர்ந்தது. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்துகொள்ள தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை ஆதரித்து படிக்கவும்.
ஜனவரி 21, சென்னை (Chennai News): இந்தியாவில் தங்கத்தின் மீதான நுகர்வு, மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக விலை உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு, நாடுகளுக்கு இடையேயான போர், பதற்ற சூழ்நிலை காரணமாகவும், தங்கத்தின் விலை என்பது கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. Job Alert: அமீரகத்தில் நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு; நாளை சென்னையில் நேர்காணல்.. அயலகத் தமிழர் நலத்துறை அறிவிப்பு.. முழு விபரம் உள்ளே.!
இன்றைய தங்கம் விலை (Today Gold Price in Chennai):
இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் விலை எப்படி இருந்தாலும், மக்கள் அதனை வாங்கி குவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் வரையில் ரூ.55,000 வரை இருந்த தங்கம் விலை, தற்போது ரூ.60 ஆயிரம் நோக்கி பயணித்து வருகிறது. நேற்று சவரன் தங்கத்தின் விலை ரூ.59,600 க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராம் தங்கத்தின் விலை ரூ.7,450 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெள்ளியின் விலை மாற்றம் இன்றி ரூ.1,04,000 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை எந்த விதமான மாற்றம் இன்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on Jan 21, 2025 09:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

