Jobs (Photo Credit: Pixabay)

ஜனவரி 21, தலைமை செயலகம் (Chennai News): தமிழ்நாடு அரசு அயலகத்தமிழர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐக்கிய அரபு அமீரகம்‌, சார்ஜாவில்‌ பணிபுரிய மார்க்கெட்டிங் இன்ஜினியர், ப்ரொடக்ஷன் இன்ஜினியர், மெஷின் ஷாப் டர்னர், மில்லிங் மெஷின் ஆபரேட்டர், ஸ்டீல் ஸ்ட்ரக்சர் ஃபேப்ரிகேட்டர், அசிஸ்டன்ட் ஃபேப்ரிகேட்டர், மெக்கானிக்கல் ஹெல்ப்பர், இன்ஸ்ட்ருமென்ட் டெக்னீசியன், சிஎன்சி லேசர் கட்டர் மெஷின் ப்ரோக்ராமர், ஹெவி டியூட்டி பஸ் டிரைவர், ஃபோர் கிளிப் ட்ரைவர் தேவைப்படுகிறார்கள். டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியர், ஐடிஐ தேர்ச்சி பெற்று ஆறு ஆண்டு பணி அனுபவத்துடன் 30 வயது முதல் 44 வயதுகுட்பட்ட மார்க்கெட்டிங் இன்ஜினியர் பணிக்கு ரூபாய் 64 ஆயிரம் முதல் 69 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். Dil Raju: பிரபல தயாரிப்பாளர் "தில் ராஜு" வீட்டில் திடீர் ஐடி சோதனை.. திரையுலகில் பரபரப்பு..! 

பணிகள் & சம்பள விபரம்:

இன்ஜினியருக்கு ரூபாய் 64,000, மெஷின் டர்ணனுக்கு ரூபாய் 40,000, மில்லிங் மெஷின் ஆபரேட்டருக்கு ரூபாய் 42,000, ஸ்டீல் ஃபேப்ரிகேட்டர் பணிக்கு ரூபாய் 55,000 முதல் 59,000 வரை, அசிஸ்டன்ட் ஃபேப்ரிகேட்டர் பணிக்கு ரூபாய் 34,000, மெக்கானிக்கல் ஹெல்ப்பருக்கு ரூபாய் 27000, இன்ஸ்ட்ரூமென்ட் டெக்னீசியனுக்கு ரூபாய் 55,000, சிஎன்ஜி லேசர் கட்டர் மெஷின் ப்ரோக்ராமருக்கு ரூபாய் 52,000, பேருந்து ஓட்டுநருக்கு ரூபாய் 51,000, போர்க்லிப்ட் டிரைவருக்கு ரூபாய் 40,000, பிரஸ் டூல் மேக்கருக்கு ரூபாய் 43,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும். மேலும்‌ உணவு மற்றும்‌ இருப்பிடம்‌, வேலை அளிப்பவரால்‌ வழங்கப்படும்‌. மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள்‌ விசா கிடைத்தப்பின்னர்‌ இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400/- மட்டும்‌ செலுத்தினால்‌ போதும்‌. இப்பணிகளுக்கான நேர்காணல்‌ 22.01.2025 அன்று காலை 9.00 மணி முதல்‌ நடைபெற உள்ளது.

எனவே, விருப்பம்‌ உள்ளவர்கள்‌ ஆகியவற்றுடன்‌ கீழ்கண்ட முகவரிக்கு நேரில்‌ அணுகவும்‌:

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்‌ (தமிழ்நாடு அரசு நிறுவனம்‌),

ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்‌,

42, ஆலந்தூர்‌ ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை,

கிண்டி, சென்னை-32.

கூடுதல்‌ விவரங்களுக்கு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்‌ இணையத்தளம் https://omcmanpower.tn.gov.in/ வாயிலாக, தொலைபேசி எண்‌ 044-22502267 & வாட்சப் எண்‌ 95662 39685 மூலமாக அறிந்துகொள்ளலாம்‌.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் வேலை தொடர்பான அறிவிப்பு, இறுதி நாள் நாளை (22 ஜனவரி 2025):