Today Gold Price (Photo Credit: Pixabay)

மே 23, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனையால் இந்திய முதலீட்டு சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் சென்னையில் ரூ.74,000 கடந்தும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. உலகளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு காரணமாக, சவரன் தங்கத்தின் விலை சில ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவருகின்றன. வானிலை: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்.! 

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

இந்நிலையில், மே 23ஆம் தேதியான இன்று வெள்ளிக்கிழமை, தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இன்று (மே 23) 22 கேரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து, கிராம் தங்கம் ரூ.8,940க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளி ரூ.1000 குறைந்து, வெள்ளியின் விலை ரூ.1,11,000க்கு விற்கப்படுகிறது.