Gold Silver Price: இன்று தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. சவரன் தங்கம் இன்று ரூ.71,920 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மே 23, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனையால் இந்திய முதலீட்டு சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் சென்னையில் ரூ.74,000 கடந்தும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. உலகளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு காரணமாக, சவரன் தங்கத்தின் விலை சில ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவருகின்றன. Paramakudi News: கழுத்தறுத்து சிறுமி கொடூர கொலை.. மாமா வெறிச்செயல்.. பரமக்குடியில் பதறவைக்கும் சம்பவம்.!
தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):
இந்நிலையில், மே 24ஆம் தேதியான இன்று சனிக்கிழமை, தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று (மே 24) 22 கேரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.8,990க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,11,000க்கு விற்கப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on May 24, 2025 09:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

