
மே 23, பரமக்குடி (Ramanathapuram News): இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, எமனேஸ்வரம் பகுதியில் இரண்டரை வயதுடைய பெண் குழந்தை தலை துண்டிக்கப்பட்டு சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிய வந்தது. இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த குழந்தை யார்? அவரை யார் கொலை செய்தார்? என்பது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, உயிரிழந்த குழந்தை லெமோரியா என்பதும், அவரை சிறுமியின் மாமாவான சஞ்சய் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. Gold Silver Price: கணிசமாக குறையும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன..? விவரம் இதோ.!
குழந்தை கொடூர கொலை:
குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்த சஞ்சய், தலையை குளத்தில் வீசிவிட்டு தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து, தனிப்படை அமைத்த காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னரே கொலைகாண காரணம் தெரிய வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது. வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையை கொடூரமாக கொலை செய்தது ஏன்? என தொடர் விசாரணை நடந்து வருகிறது.