Crime Scene (Photo Credit: Pixabay)

மே 30, சோலாப்பூர் (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூர் (Solapur) மொஹோல் தாலுகாவில் உள்ள சவுண்டேன் கிராமத்தை சேர்ந்தவர் நேதாஜி தனாஜி நம்தே. இவர், கடந்த மே 24ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர், அவர் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். இதனையடுத்து, மகனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். Trending Video: தப்பான அட்ரஸ் கொடுப்பியா?.. வாடிக்கையாரை வெளுத்த டெலிவரி பாய்.. எலும்பு முறிந்து மருத்துவமனையில் அட்மிட்.!

நண்பர் கொலை:

புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அவரது நண்பர் விகாஸ் மாருதி குராவ் மீது சந்தேகம் எழுந்தது. அதன்பேரில், அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், நேதாஜி நம்தே தனது தாயாருடன் தகாத உறவைக் கொண்டிருந்தார். இதனால் நான் அவரை கொலை (Murder) செய்து, உடலை வயலில் அடக்கம் செய்யப்பட்டதாக விகாஸ் காவல்துறையினரிடம் கூறினார். இதனையடுத்து, விகாஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், ஜூன் 2ஆம் தேதி வரை அவருக்கு போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.