Breaking: தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. ரூ. 68,000-ஐ தாண்டியது..!
தங்கத்தின் விலை, ரூ.68000-ஐ கடந்து அதிர்ச்சி இருக்கிறது. இதனால் நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தங்கத்தின் விலை உச்சத்திலேயே இருந்து வருகிறது.
ஏப்ரல் 01, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனை, இந்திய முதலீட்டு சந்தையையும் கடுமையான அளவு பாதித்துள்ளது. இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு காரணமாக, சவரன் தங்கத்தின் விலை சில ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் விற்பனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவருகின்றன. தங்கநகைக்கடை உரிமையாளர்களும் அதனை உறுதி செய்கின்றனர். Chennai Shocker: கருணாஸ் கட்சியின் வழக்கறிஞர் கொடூரமாக வெட்டிக்கொலை.. சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு வலைவீச்சு..!
தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):
இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை, வாரத்தின் தொடக்கத்துக்கு பின் தங்கத்தின் விலை உச்சத்தில் இருக்கிறது. இன்று சவரன் ஆபரண தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து ரூ.480 உயர்ந்து, இன்று சவரன் தங்கத்தின் விலை ரூ.68080 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.60 உயர்ந்து, கிராம் தங்கம் விலை இன்று ரூ.8510 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோ ஒன்று ரூ.114000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் வெள்ளி இன்று விலை ரூ.114 க்கு விற்கப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on Apr 01, 2025 10:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

