Chennai Lawyer Murder Case 31 March 2025 (Photo Credit: @NewsJ / @ThanthiTV X)

மார்ச் 31, விருகம்பாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள விருகம்பாக்கம், கணபதி நகர், பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த 4 மாதமாக வெங்கடேசன் என்ற வழக்கறிஞர் வசித்து வருகிறார். இவரின் மனைவி சரளா. கடந்த 2 நாட்களாகவே வெங்கடேசன் தங்கியிருந்த வீடு வெளிப்பக்கமாக மூடப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம் பக்கத்தினர் விருகம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நேரில் வந்த அதிகாரிகள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். Ramadan 2025: ரமலான் கொண்டாட்டம் 2025: திருச்சியில் பிரம்மாண்ட தொழுகை.! 

அரசியல் கட்சியின் வழக்கறிஞர் பிரிவை சேர்ந்தவர்:

அப்போது, வெங்கடேசன் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலத்தில், முகத்தில் வெட்டுக்கத்தியும் சொருகியபடி இருந்தது. இதனால் வழக்கறிஞரை திட்டமிட்டு கொலை செய்து வீட்டை பூட்டி சென்றிருக்கலாம் என சந்தேகித்த காவல்துறையினர், அவரின் மனைவி சரளாவுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், வழக்கறிஞரை கொலை செய்தது யார்? அவரின் பின்னணி என்ன என விசாரணை நடந்தது. விசாரணையில், கொலை செய்யப்பட்ட வெங்கடேசன் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியை சேர்ந்தவர் என்பது உறுதியாகியுள்ளது. Erode Shocker: ஆசிட் லாரியை சுத்தம் செய்தபோது சோகம்; 2 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி பலி.! 

காவல்துறை விசாரணை:

அவரை கொலை செய்ததாக சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த வெங்கடேசனின் நண்பர்கள் இருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கார்த்திக் என்ற 29 வழக்குகள் கொண்ட சரித்திர பதிவேடு குற்றவாளியை தேடி, சிவகங்கைக்கு தனிப்படையும் விரைந்துள்ளது. கார்த்திக் கைதாகிய பின்னரே வழக்கறிஞரின் கொலைக்கான மர்மம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.