Today Gold Silver Price: இன்று தங்கத்தின் விலை புதிய உச்சக்கட்டம்.. ரூ.62,000 ஐ நெருங்குகிறது.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
பங்குச்சந்தை முதலீடுகளில் ஏற்பட்ட மாற்றத்தால் திடீர் உச்சத்தை சந்தித்த தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் விலையை (Today Gold Rate), லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.
ஜனவரி 31, சென்னை (Chennai News): உலகளவில் தங்கத்தின் மீதான நுகர்வு, போர்ப்பதற்றம், தேசிய அளவில் மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக, தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் விலை எப்படி இருந்தாலும், மக்கள் அதனை வாங்கி குவித்து வருகின்றனர். கடந்த சில வாரம் வரையில் ரூ.55,000 வரை இருந்த தங்கம் விலை, தற்போது ரூ.60,000-ஐ கடந்து சென்று விட்டது. Salem Shocker: "நல்ல படி, அம்மாவை பார்த்துக்கோ" - அறிவுரை கூறிய மூதாட்டி கொலை.. 17 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்.!
சென்னையில் இன்றைய தங்கம் விலை (Today Gold Rate in Chennai):
நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 61,480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ. 7,730-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை ரூ.1,07,000 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் மதிப்புள்ள ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 61,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ. 15 உயர்ந்து, ரூ. 7,745 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றம் இன்றி ரூ. 1,07,000 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட கடந்த 6 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,640 என்ற அளவில் உயர்ந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
(The above story first appeared on LatestLY on Feb 01, 2025 10:07 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

