Gold Silver Price: குறைந்த வேகத்தில் 73,000ஐ நோக்கி.. படிப்படியாக உயரும் தங்கம் விலை.. விவரம் இதோ.!

கடந்த சில நாட்களாக குறைந்த தங்கம் விலை, தற்போது உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழை பின்தொடரவும்.

Gold Silver Price: குறைந்த வேகத்தில் 73,000ஐ நோக்கி.. படிப்படியாக உயரும் தங்கம் விலை.. விவரம் இதோ.!
Today Gold Price (Photo Credit: Pixabay)

ஜூன் 11, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனை, உலகளவில் நடந்து வரும் போர்கள், அதனால் ஏற்படும் நேரடி/மறைமுக பாதிப்புகள், கிடைக்கும் தங்கத்தின் அளவு, உலகளாவிய தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் விலை ரூ.74,000ஐ கடந்து சென்று சரிவை சந்தித்தது. தற்போது மீண்டும் அத்தொகையை நோக்கி மெல்ல உயர்ந்து வருகிறது. பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு பால் ஊற்றிய பெண்கள்.. காளி போல ஆவேசத்தில் சம்பவம்.! 

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.72,160 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.75 உயர்ந்து கிராம் தங்கம் இன்று ரூ.9,020 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,000 உயர்ந்து ரூ.1,19,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).