Gold Silver Price: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைவு; தொடர் இறங்குமுகத்தில் தங்கம் விலை.!
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து ரூ.59 ஆயிரம் கடந்து விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, இந்த வாரத்தில் இறங்குமுகத்தை கண்டுள்ளது.
நவம்பர் 13, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நிலவிவரும் பொருளாதார சிக்கல், உக்ரைன் - ரஷியா போர், இஸ்ரேல் - பாலஸ்தீனியம் போர், இஸ்ரேல் - ஈரான் போர், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் உட்பட பல்வேறு காரணங்களால் மத்திய கிழக்கு மட்டுமல்லாது உலக நாடுகளிலும் பதற்ற சூழல் அதிகரித்துள்ளது. இதனால் பங்குசந்தைகளில் தொடர் ஏற்ற-இறக்கம் என நிலையற்ற சூழல் பல்வேறு நாடுகளையும் நேரடியாக, மறைமுகமாக பாதித்து பொருளாதார பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. School Girl Sexually Harassed: தந்தை-மகனாக சிறுமிகளிடம் அத்துமீறிய தந்தை-17 வயது மகன்.. உடந்தையாக தாய்.. கரூரில் பகீர்.!
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 2 மடங்கு உயர்ந்த விலை:
இந்தியாவை பொறுத்தமட்டில் தங்கம், வெள்ளி பொருட்களின் விலையானது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. தங்கத்தின் விலை கடந்த 2014ம் ஆண்டில் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றளவில் 10 ஆண்டுகளில் 2 மடங்கு விலை உயர்ந்து இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.60 ஆயிரத்தையும் நெருங்கி இருக்கிறது. தங்க நகையை வாங்க நினைப்போர் தொடர்ந்து விலையேற்றத்தால் பரிதவித்து வந்தாலும், தங்கத்தின் மீதான நுகர்வு அதிகரிப்பால் விலை உச்சத்திலேயே இருந்து வருகிறது.
இன்றைய விலை (Gold Rate in Chennai):
சென்னையில் நேற்று (நவம்பர் 12) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,085 க்கும், சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.56,680 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னை ரூ.320 குறைந்து ரூ.56,360 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்தது ரூ.7045 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு இன்று ரூ.1000 உயர்ந்து, ரூ.1,01,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on Nov 13, 2024 10:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

