நவம்பர் 13, குளித்தலை (Karur News): கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை (Kulithalai), கரையான்பட்டி பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சம்பவத்தன்று குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் உட்பட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அதிகாரிகள் உங்களுக்கு ஏதேனும் பாலியல் தொல்லை குறித்த விஷயம் நடந்திருந்தால், அதுகுறித்து தயங்காமல் புகார் அளிக்க முன்வர வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தனர். வானிலை: மக்களே குடை எடுத்துக்கோங்க.. "வந்தாச்சு ஆரஞ்சு அலர்ட்".. காலை 10 மணிவரை 22 மாவட்டங்களில் கனமழை..!
5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை:
இதனிடையே, அதே பள்ளியில் பயின்று வரும் 15 வயது சிறுமி ஒருவர், தனது சித்தப்பா, அவரின் மகன் ஆகியோரால் தனக்கு பாலியல் தொல்லை நேர்ந்ததாக புகார் அளித்துள்ளார். மேலும், கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக இருவரும் சிறுமிக்கும், அவரின் மூத்த சகோதரிக்கு பாலியல் தொல்லை அளித்து வருவதாகவும், இதனை தாயிடம் கூறியபோது, அவர் சித்தப்பா, அண்ணனை கண்டிக்காமல், அவர்களுடன் விருப்பத்திற்கு இணங்கிச்செல் என கண்டித்ததாகவும் கூறியுள்ளார்.
போக்ஸோவில் கைது:
இதனைக்கேட்டு அதிர்ந்துபோன காவல்துறையினர், சிறுமியின் வாக்குமூலத்தை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து, சிறுமியின் தாய், சித்தப்பா, அண்ணன் ஆகியோரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த அதிகாரிகள், சிறையில் அடைத்தனர். விசாரணையில், சித்தப்பா செல்வம், தாய் ஜோதி, செல்வத்தின் 17 வயது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.