Gold Silver Rate: இன்று மீண்டும் உச்சக்கட்டம்.. சவரன் தங்கம் ரூ.60,400 க்கு விற்பனை.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
மாற்றம் இன்றி சில நாட்களாக தொடர்ந்த தங்கம் விலை, இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.60,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஜனவரி 24, சென்னை (Chennai News): இந்தியாவில் தங்கத்தின் மீதான நுகர்வு, மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக விலை உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு, நாடுகளுக்கு இடையேயான போர், பதற்ற சூழ்நிலை காரணமாகவும், தங்கத்தின் விலை என்பது கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் விலை எப்படி இருந்தாலும், மக்கள் அதனை வாங்கி குவித்து வருகின்றனர். கடந்த வாரம் வரையில் ரூ.55,000 வரை இருந்த தங்கம் விலை, தற்போது ரூ.60 ஆயிரம் சென்று விட்டது. சாதிமறுப்பு திருமணம் செய்த பெண் கடத்தல்.. பெற்றோர் உட்பட 6 பேர் கைது., அதிரடி காட்டிய சேலம் போலீஸ்.!
இன்றைய தங்கம் விலை (Today Gold Price in Chennai):
இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.60,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.30 உயர்ந்து, ரூ.7,555 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து, ரூ.1,05,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக ரூ.60 ஆயிரம் தாண்டி மாற்றம் இன்றி தொடர்ந்த தங்கம் விலை, இன்று ரூ.60,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on Jan 24, 2025 10:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

