Couple Dhanush & Roshini (Photo Credit: YouTube)

ஜனவரி 24, எடப்பாடி (Salem News): சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி (Edappadi), செட்டிமாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரின் மகன் தனுஷ். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம், சின்னாம்பள்ளி, தோளூர் கிராமத்தில் வசித்து வருபவர் குமாரசெல்வம். இவரின் மகள் ரோஷினி. தனுஷ் - ரோஷினி இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக மாறி இருக்கிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தவர் என்பதால், பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கர்ப்பிணி பெண் கடத்தி செல்லப்பட்டார்:

இதனால் காதல் ஜோடியான தனுஷ் - ரோஷினி, பெற்றோரை எதிர்த்து சாதி மறுப்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். அதனைத்தொடர்ந்து, கடந்த 7 மாதமாக கணவரின் வீட்டில் வசித்து வரும் ரோஷினி, தற்போது 3 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று ரோஷினியின் கணவர் வீட்டிற்கு வந்த அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில், அவரை காரில் கடத்தி தப்பிச் சென்றனர். Theni Shocker: நீதிமன்றம் முன் வெட்டிக்கொலை; தேனியில் பயங்கரம்.. ஓடஓட விரட்டி அதிர்ச்சி செயல்.! 

காவல்துறையினர் தீவிர விசாரணை:

பக்கத்து வீட்டு பெண்மணி அவர்களை தடுக்க முயன்றும், பெண்ணின் எதிர்ப்பை மீறி கடத்தல் சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக தனுஷின் தரப்பில் எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், சிசிடிவி கேமிரா ஆதாரமும் வெளியானது. இதனையடுத்து, களத்தில் இறங்கிய எடப்பாடி காவல்துறையினர் பெண்ணை தீவிரமாக தேடி வந்தனர்.

15 மணிநேரத்தில் பெண் மீட்பு:

இந்நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் பென்னாகரத்தில் வைத்து பெண் மீட்கப்பட்டார். மேலும், அவரை கடத்திச் சென்றதாக பெண்ணின் பெற்றோர், மாமா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு எடப்பாடி காவல் நிலையம் அழைத்து வரப்பட்டனர். அங்கு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் கடத்தி செல்லப்பட்ட 15 மணிநேரத்திற்குள், அவர் காவல்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.