Gold Silver Price: குறைந்த வேகத்தில் 72,000ஐ நோக்கி.. படிப்படியாக உயரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?.!

கடந்த சில நாட்களாக குறைந்து இருந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் மெல்ல உயரத் தொடங்கி இருக்கிறது. நாளை மீண்டும் ரூ.72,000 ஐ கடந்து சவரன் தங்கம் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Gold Silver Price: குறைந்த வேகத்தில் 72,000ஐ நோக்கி.. படிப்படியாக உயரும் தங்கம் விலை..  இன்றைய நிலவரம் என்ன?.!
Today Gold Price (Photo Credit: Pixabay)

மே 30, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடித்து வரும் பொருளாதார பிரச்சனை, உலகளவில் நடந்து வரும் போர்கள், அதனால் ஏற்படும் நேரடி/மறைமுக பாதிப்புகள், கிடைக்கும் தங்கத்தின் அளவு, உலகளாவிய தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் விலை ரூ.74,000ஐ கடந்து சென்று சரிவை சந்தித்தது. தற்போது மீண்டும் அத்தொகையை நோக்கி மெல்ல உயர்ந்து வருகிறது. வானிலை: நீலகிரி, கோவை மலைப்பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்'.. வானிலை மையம் எச்சரிக்கை..!

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் விற்பனை செய்யப்படும் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, சவரன் தங்கத்தின் விலை ரூ.71,360 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து கிராம் தங்கம் இன்று ரூ.8,920 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் மாற்றம் இன்றி ரூ.1,11,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை மீண்டும் தொடர்ந்து உயர்ந்து ரூ.72,000ஐ நெருங்குகிறது.

(The above story first appeared on LatestLY on May 30, 2025 09:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).