Today Gold Silver Price: ஷாக்கோ ஷாக்.. தங்கம் சவரன் ரூ.960 உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
தங்க நகை வாங்க நினைக்கும் நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தரும் தங்கத்தின் விலை, தொடர்ந்து விண்ணை முட்டி வருகிறது.
ஜனவரி 31, சென்னை (Chennai News): உலகளவில் தங்கத்தின் மீதான நுகர்வு, போர்ப்பதற்றம், தேசிய அளவில் மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக, தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் விலை எப்படி இருந்தாலும், மக்கள் அதனை வாங்கி குவித்து வருகின்றனர். கடந்த சில வாரம் வரையில் ரூ.55,000 வரை இருந்த தங்கம் விலை, தற்போது ரூ.60,000-ஐ கடந்து சென்று விட்டது. Coimbatore: கல்லூரி மாணவிக்கு நடுரோட்டில் முத்தம்... சிரித்தபடி மன்னிப்பு கேட்டதால் இளைஞர் அதிர்ச்சி செயல்.!
சென்னையில் இன்றைய தங்கம் விலை (Today Gold Rate in Chennai):
நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 60,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ. 7,610-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை ரூ. 1,06,000 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் மதிப்புள்ள ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, இன்று ஒரு சவரன் ஹாங்கம் விலை ரூ. 61,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ. 120 உயர்ந்து, ரூ. 7,730 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 1000 உயர்ந்து, இன்று வெள்ளியின் விலை ரூ. 1,07,000 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,520 என்ற அளவில் உயர்ந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 10:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

