Gold Silver Price: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு; இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ.!

கடந்த சில நாட்களாக உயர்ந்து ரூ.60 ஆயிரம் நோக்கி பயணித்த தங்கம் விலை, இன்று சிறிய இரங்கலை சந்தித்துள்ளது. இதனால் இன்று கிராம் தங்கம் ரூ.7435 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Silver Price: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு; இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ.!
Gold Silver Price (Photo Credit: Pixabay)

ஜனவரி 16, சென்னை (Chennai News): இந்தியாவில் தங்கத்தின் மீதான நுகர்வு, மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக விலை உச்சத்தில் இருந்து வருகிறது. மேலும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு, நாடுகளுக்கு இடையேயான போர், பதற்ற சூழ்நிலை காரணமாகவும், தங்கத்தின் விலை என்பது கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. Rahul Tiky Dies: தலைக்கவசம் அணியாததால் விபரீதம்; மாமியார் வீட்டிற்கு சென்ற யூடியூபரின் உயிரை பறித்த எமன்..! 

இன்றைய தங்கம் விலை (Today Gold Price in Chennai):

இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் விலை எப்படி இருந்தாலும், மக்கள் அதனை வாங்கி குவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் வரையில் ரூ.55,000 வரை இருந்த தங்கம் விலை, இன்று ரூ.120 குறைந்துள்ள நிலையில், இன்று சவரன் தங்கத்தின் விலை ரூ.59,540 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து, இன்று கிராம் தங்கத்தின் விலை ரூ.7,435 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றம் இன்றி ரூ.1,04,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Jan 18, 2025 10:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).