ஜனவரி 18, பவானி (Erode News): ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, கருங்கல்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன். இவரின் மகன் ராகுல் (வயது 27). இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 8 இலட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள நிலையில், மக்களை கவரும் வகையில் காமெடி, கலகலப்பு, ஏழைகளுக்கு உதவி செய்வது சார்ந்த வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்து வரவேற்பை பெற்றுள்ளார்.
புதுமணத்தம்பதிகள்:
அங்குள்ள கோபிசெட்டிபாளையம், கவுந்தம்பாடி, நேரு நகர் பகுதியில் வசித்து வருபவர் வேலுமணி. இவருக்கு இளவயது மகள் இருக்கிறார். ராகுல் (Ragul Tiky) - வேலுமணியின் மகள் இடையே சமீபத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது. புதுமணத் தம்பதிகள் பல எதிர்கால கனவுகளுடன் வாழ்க்கையை வாழத் தொடங்கி இருக்கிறது. இதனிடையே, கடந்த வியாழக்கிழமை இரவில் ராகுல் தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். Sniffer Dog Astro Dies: மதுரை மத்திய சிறை மோப்ப நாய் ஆஸ்ட்ரோ மரணம்; 21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்.!
விபத்தில் சிக்கி சோகம்:
இரவு சுமார் 10:30 மணியளவில், தனக்கு சொந்தமான பல்சர் ஆர்எஸ் 200 ரக பைக்கில், கவுந்தம்பாடி நோக்கி ஈரோட்டில் இருந்து பயணம் செய்தார். அப்போது அதிவேகத்தில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், தலைக்கவசமும் அணியவில்லை. அதிவேகத்தால் ஒருகட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலைத்தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில், ராகுல் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, சாலையில் 50 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டார்.
தலைக்கவசம் அணியாததால் விபரீதம்:
தலைக்கவசம் அணியாமல் சென்றதால், தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் மக்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் நிகழ்விடத்திலேயே மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் அவரின் குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் மறைவு அவரின் பின்தொடர்பாளர்கள் இடையேயும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராகுலின் இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கிய பின் எடுக்கப்பட்ட காணொளி:
#rip #ripriggyg #rahultiky pic.twitter.com/0nuyzASTUW
— 𝐊𝐔𝐓𝐓𝐘⚔️ᵗʷᵉᵉᵗᶻ (@kutty_tweetz) January 17, 2025
ராகுலின் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
ராகுலின் சிரிக்க வைக்கும் காணொளி:
View this post on Instagram