Trichy SP Life Threaten: திருச்சி எஸ்பிக்கு மிரட்டல்.. "கொம்பன் பிரதர்ஸ்" எடிட் செய்த சிறுவன்.. தொக்காக குடும்பத்தையே தூக்கி அறிவுரை கூறிய எஸ்பி..!
கொலை மிரட்டல் விடுத்த மூன்று சிறுவர்களுக்கும் திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் நேரில் அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
ஜூன் 14, திருச்சி (Trichy News): திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் (Trichy district SP Varunkumar) பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில், கொம்பன் ஜெகன் டீம் (Komban_jegan_team) என்ற முகவரியில் இருந்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் புகைப்படத்தை பகிர்ந்து, அத்துடன் "விரைவில் தலைகள் சிதறும் Komban Brothers" என பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. TN Weather Forecast: தமிழகத்தின் நாளைய வானிலை குறித்த முன்னறிவிப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
இது தொடர்பாக, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், மேற்படி இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவேற்றம் செய்த 3 சிறுவர்கள் கண்டறியப்பட்டனர். தொடர்ந்து அவர்களின் பெற்றோர்களை எஸ். பி வருண்குமார் அழைத்து அறிவுரை வழங்கினார்.