நவம்பர் 02, சமயபுரம் (Trichy News): பெரம்பலூர் மாவட்டத்தில் (Perambalur) உள்ள குன்னம், பேரளி கிராமத்தில் வசித்து வருபவர் அந்தோணிசாமி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி கலாவதி (வயது 45). தம்பதிகளுக்கு 2 மகன்கள், ஒரு மகள் இருக்கிறார். மகள் மீரா ஜாஸ்மின் (22) எம்.எஸ்.சி பட்டதாரி ஆவார். கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி வீட்டில் நேர்முகத்தேர்வுக்கு சென்று வருவதாக கூறியவர், திருச்சி எம்.ஆர் பாளையம் பகுதியில் இருக்கும் காப்புக்காட்டில் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவரின் சடலத்துக்கு அருகிலேயே 2 பீர் பாட்டில், சிகிரெட் துண்டுகள், இருசக்கர வாகனம் வந்து சென்றதற்கான தடயங்கள் இருந்தன.
காதல் தோல்வி தற்கொலை:
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த லால்குடி காவல்துறை அதிகாரிகள், மீராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடைபெற்ற விசாரணையில், மீரா ஜாஸ்மின் திருச்சியில் செயல்பட்டு வரும் கல்லூரியில் எம்.எஸ்.சி. கணிதம் பயின்று இருக்கிறார். படிப்புக்காக திருச்சி சீனிவாச நகரில் வீடு ஒன்றும் வாடகைக்கு எடுத்து தாயுடன் தங்கி இருந்துள்ளார். அந்த சமயத்தில் தோழியின் அண்ணன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்துள்ளனர். பின் காதலருடன் பேசுவதை மீரா நிறுத்திவிட்டார். இதனால் தோழியின் அண்ணன் 6 மாதங்களுக்கு முன்னதாக தற்கொலை செய்துகொண்டு உயிரை விட்டுள்ளார். மணல் லாரி கவிழ்ந்து கோர விபத்து.. எம்.சாண்ட்டில் சிக்கி மூச்சுத்திணறி பறிபோன 3 உயிர்கள்.!
பெண் எரித்துக்கொலை:
காதலனின் பிறந்தன நாளான அக்.30ம் தேதி மீரா ஜாஸ்மின் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். வீட்டில் நேர்காணலுக்கு சென்று வருவதாக கூறி புறப்பட்டவர், தனது தோழி ஒருவரின் பெரம்பலூர் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். அங்கு மறைந்த காதலனின் நண்பர்கள் 2 பேர் இருந்துள்ளனர். அவர்கள் தங்களது நண்பன் மறைவுக்கு மீரா காரணம் என ஆதங்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த சமயத்தில் நட்பாக பேசுவது போல நடித்து, மீராவை பேருந்து நிறுத்தத்துக்கு அழைத்துச் சென்று விடுவதாக அழைத்துள்ளனர். இவர்களை நம்பி மீரா ஜாஸ்மினும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
பதறவைக்கும் சம்பவம்:
தங்களின் திட்டப்படி தயாராக இருந்த 2 இளைஞர்களும், காப்புக்காடு பகுதிக்கு மீராவை கடத்திச் சென்றுள்ளனர். அங்கு மீராவை கொடூரமாக சித்ரவதை செய்து உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்துள்ளனர். பிறப்புறுப்பு பகுதியிலும் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ள காரணத்தால், மீரா கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? எனவும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகாரிகள் தரப்பில் வலைவீசப்பட்டுள்ளது. பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் கொலை வழக்கில் திருப்பம்:
இந்நிலையில், உயிரிழந்த மீரா ஜாஸ்மினை யாரும் கொலை செய்யவில்லை என காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். இதுதொடர்பாக எஸ்பி வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "மீரா ஜாஸ்மினை யாரும் கொலை செய்யவில்லை. சம்பவத்தன்று தனது வீட்டின் அருகேயுள்ள பெட்ரோல் பங்கில் கேனில் பெட்ரோல் வாங்கியவர், சத்திரம் பேருந்து நிறுத்தம் வந்து பெரம்பலூர் பேருந்தில் ஏறி பயணம் செய்தார். சிறுகானூர் காப்புக்காடு பகுதியில் சென்று அவர் உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரை கொலை செய்ததற்கான அடையாளங்கள் ஏதும் இல்லை. மீரா ஜாஸ்மின் காதலித்த இளைஞரின் வீட்டில் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவர் தற்கொலை செய்தது உண்மை. ஜாஸ்மின் காதலனின் நினைவுடன் வருத்தத்திலேயே இருந்து வந்துள்ளார். காதலனின் செல்போன் அவரிடம் இருந்ததால், தினமும் அதனை வைத்து காதலனுக்கு மெசேஜ் அனுப்பி வாழ்க்கையை நகர்த்தி இருக்கிறார். வருத்தத்தில் இருந்தவர் துயரமான முடிவை எடுத்துள்ளார். அதற்கான ஆதாரங்கள், வாட்சப் மெசேஜ்கள் உள்ளன. பெண் யாராலும் கொலை செய்யப்படவில்லை, பெண்ணுக்கு எதுவும் நடக்கவில்லை. காதலன் இறந்த சோகத்தில் விபரீதத்தை மேற்கொண்டுள்ளார்" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.