Viluppuram Vikravandi Car Accident Today (Photo Credit: Facebook)

அக்டோபர் 02, விக்கிரவாண்டி (Viluppuram News Today): விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் (Vikravandi Car Accident Today), சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை பயங்கர விபத்து நடந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையில் உள்ள கொளத்தூர் மற்றும் ஆவடி பகுதியில் வசித்து வருபவர்கள் தங்கவேல், உமாநாதன். இவர்கள் உட்பட நண்பர்கள் 3 பேர் என மொத்தமாக 5 பேர் இன்று மூணாறுக்கு சுற்றுலா செல்ல காரில் புறப்பட்டுள்ளனர். இவர்களின் கார் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் வந்துள்ளது. Breaking: சரஸ்வதி பூஜையில் 2 முறை உச்சம் தொட்ட தங்கம்.. ரூ.88,000ஐ நெருங்கும் விலை.. நகை வாங்க நினைப்போருக்கு ஷாக்.! 

அதிவேகத்தில் கார் பயணம் & விபத்து:

அப்போது, அதிவேகமாக காரில் பயணம் செய்தவர்கள், முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியை சாலையின் வலப்பக்கம் ஏறி முந்திச்செல்ல முற்பட்டுள்ளனர். அப்போது, எதிர்பார்த்த விதமாக சாலைத்தடுப்பில் மோதி கார் கட்டுப்பாட்டை இழந்தது. சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட கார், முன்னால் சென்ற லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காரும் உடனடியாக தீப்பிடித்தது. இதனால் காரில் பயணம் செய்த 3 பேர் நிகழ்விடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயத்துடன் துடிதுடித்தனர். நாளைய வானிலை: அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. இந்த மாவட்டங்கள் உஷார்.!

காவல்துறை விசாரணை:

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மீட்புப்படையினர், உள்ளூர் மக்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். எனினும், 2 பேரை மட்டுமே படுகாயத்துடன் மீட்க முடிந்தது. அவர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக வாகனத்தை அதிவேகத்தில் செலுத்தியதும், லாரியை முந்திச்செல்ல முற்பட்டபோது விபத்து நடந்ததும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து தங்கவேல், உமாநாதன் உயிரிழந்துவிட்டனர். பிற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மிதவேகம் மிகநன்று!