ஜூன் 02, திருச்சி (Trichy News): தென்மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு (Chennai) நாளொன்றுக்கு 10 இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இரயில்கள் மூலமாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் சென்னை நகரங்களுக்கு சென்று வருகின்றனர். அதேபோல, சரக்கு ரயில்களும் பயணித்து வருகின்றன.
இந்நிலையில், கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி பயணம் செய்துள்ளது. இந்த இரயில் திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, புதுக்குடி மேலவாளாடி கிராமத்தில் நள்ளிரவு 01:05 மணிக்கு பயணம் செய்தது.
அப்போது, தண்டவாளத்தின் நடுப்பகுதியில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளன. இதனைகவனித்த இரயில் ஓட்டுநர், இரயிலை நிறுத்த முயற்சித்தார். இரயில் தொடர்ந்து அதிவேகமாக வந்ததால், அதனை நிறுத்தவும் முடியவில்லை. தண்டவாளத்தில் வைக்கப்பட்ட பெரிய டயரின் மீது இடித்து இரயில் நின்றது. Someshwara Beach: கடற்கரையில் கல்லூரி தோழிகளுடன் இருந்த 3 மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்; 6 பேர் கும்பல் வெறிச்செயல்.!
பயங்கர சப்தத்தோடு இரயிலின் வேகம் குறைந்து, எஞ்சினுடன் சேர்ந்த 4 பெட்டிகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. லாரி டயர்கள் இரயில் பெட்டிகளுக்கு மின்சாரம் வழங்கும் சேவையை துண்டித்ததால், 4 பெட்டிகளுக்கான மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டது.
மர்ம நபர்கள் சதிச்செயலுடன் தண்டவாளத்தில் லாரி டயர் வைத்து சென்றது உறுதியானதால், இரயில்வே அதிகாரிகளுக்குட் காவல் தெரிவிக்கப்பட்டது. நடுவழியில் இரயில் நின்றுபோனதால் பயணிகளும் அச்சமடைந்தனர். அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் விரைந்து வந்து பெட்டிகளுக்கான மின் விநியோகத்தை சீர் செய்தனர்.
இதனால் அரைமணிநேரம் தாமதத்தத்துடன் இரயில் புறப்பட்டு சென்றது. சம்பவ இடத்தில் இரயில்வே காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.