2 Women Involved Fraud Case: ஆசை வார்த்தை கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்ட கும்பல்; 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது..!
திண்டுக்கலில் செல்போனில் பேசி பழகி உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி வரவழைத்து மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டனர்.
மே 14, திண்டுக்கல் (Dindigul News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய விவசாயிக்கும், சின்னாளப்பட்டியை சேர்ந்த கணவரை இழந்து வாழ்ந்து வரும் பவித்ரா (வயது 24) என்பவருக்கும் இடையே செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், பவித்ரா அவரிடம் நாம் ஒன்றாக நேரில் சந்தித்து உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். Nurse Girl Raped Her Boy Friend: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் பாலியல் பலாத்காரம்; காதலன் வீடியோ எடுத்து மிரட்டல்..!
இதனையடுத்து, பவித்ரா கூறுவதை உண்மை என நம்பி பழனியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் (Private Hotel Room) அவர் வந்துள்ளார். அப்போது, அங்கு பவித்ராவுடன் மற்றொரு பெண்ணும் இருந்துள்ளார். பின்னர், இவர்கள் 3 பேரும் ஒன்றாக இருந்துவந்த நிலையில், பவித்ராவின் ஆண் நண்பர்கள் மூன்று பேர் விடுதி அறைக்குள் வந்து, அவர்கள் திட்டமிட்டப்படி, அந்த விவசாயியை இவர்கள் 5 பேரும் ஒன்றாக சேர்ந்து அடித்து தாக்கியுள்ளனர். மேலும், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, விலையுயர்ந்த செல்போன் மற்றும் 10,000 ரூபாய் பணத்தை பரித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
பின்னர், மறுநாள் விசாயியிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, பணம் தர வேண்டும் என்று மிரட்டி வந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், விசாரணை நடத்திய காவல்துறையினர், மோசடியில் ஈடுபட்ட கும்பல் பழனியில் தங்கி இருப்பதாக தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்று, அந்த கும்பலை சார்ந்த பவித்ரா, திண்டுக்கலை சேர்ந்த காமாட்சி (வயது 25), குணசேகரன் (வயது 40), பாலமுருகன் (வயது 37) மற்றும் லோகநாதன் (வயது 28) ஆகியோரை கைது செய்தனர். மேலும், 2 கார்கள் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். இதனையடுத்து, இச்சம்பவம் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)