பெண் வழக்கறிஞரை ஏமாற்றிய காவலர்.. விடுதி-விடுதியாக அழைத்துச்சென்று உல்லாசம்.. பரபரப்பு புகார்.!

நட்பாக பழகி காதலில் விழுந்த பெண் வழக்கறிஞரை, விடுதி-விடுதியாக அழைத்துச்சென்று உல்லாசம் அனுபவித்து சாதியை காரணம் காண்பித்து ஏமாற்றியதாக காவல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

பெண் வழக்கறிஞரை ஏமாற்றிய காவலர்.. விடுதி-விடுதியாக அழைத்துச்சென்று உல்லாசம்.. பரபரப்பு புகார்.!
Arrest | Sexual Harassment File Pic (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 07, பெங்களூர் (Bangalore News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பசவராஜ் நகரில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். வழக்கறிஞரான பெண்ணுக்கும், மங்களூர் நகரில் நக்சல் ஒழிப்பு படையில் காவலராக வேலை பார்த்து வரும் சித்தேகவுடா என்ற 32 வயது நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், சித்தே கவுடாவின் சொந்த ஊர் பாகல் கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜமகண்டி ஆகும். தொடக்கத்தில் நண்பர்களாக பழகி வந்த இருவரும், பின்னாளில் காதலிக்க தொடங்கியதாக தெரிய வருகிறது. இதனால் காதலியை பார்க்க அடிக்கடி மங்களூருவிலிருந்து சித்தே கவுடா பெங்களூர் பக்கம் வந்து சென்றுள்ளார். Sathyabama: அதிமுக முன்னாள் எம்.பி. சத்யபாமா கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமி தரவு.! 

பெண்ணை ஏமாற்றியதாக வழக்கறிஞர் கைது:

இந்நிலையில், இளம் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பலமுறை உல்லாசமாகவும் இருந்துள்ளார். ஒருகட்டத்தில் இளம்பெண்ணை அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், சாதியை காட்டி திருமணத்திற்கு மறுப்பு சொன்னதாக தெரியவரும் நிலையில், பெண்மணி கேட்டபோது கொலை மிரட்டலும் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பசவராஜ் நகர் காவல் நிலையத்தில் சித்தே கவுடா மீது பெண் புகார் அளிக்கவே, அவர் தலைமறைவனார். தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

(The above story first appeared on LatestLY on Sep 07, 2025 02:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).