Raining School Holiday (Photo Credit: @behindwoods X)

செப்டம்பர் 10, நுங்கம்பாக்கம் (Chennai News): வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்திருந்தது. வானிலை: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. 12 மாவட்டங்களுக்கு அலர்ட்.! 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பள்ளிகளுக்கு விடுமுறை (Dindigul Kodaikanal School Holiday):

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெறுவதால், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மழை தொடர்பாக விடுமுறை அறிவிப்பை முடிவு எடுத்து அறிவித்துக் கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை தொடர்ந்து வருவதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.