Sunita Williams' 3rd Mission To Space: 3-வது முறையாக விண்வெளி பயணம்.. சுனிதா வில்லியம்ஸின் பயணம் எப்போது?.!

சுனிதா வில்லியம்ஸ் வரும் 17 ஆம் தேதி விண்வெளி பயணம் மேற்கொள்வார் என்று நாசா தெரிவித்துள்ளது.

Sunita Williams (Photo Credit: @ndtv X)

மே 08, வாஷிங்டன் (Technology News): அமெரிக்காவில் இருக்கும் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை தான் சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams). இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளிக்குச் சென்று திரும்பியுள்ளார். அந்த பயணங்களில் இவர் தன்னுடன் பகவத் கீதையை விண்வெளிக்கு எடுத்துச் சென்றிருந்தார். இதற்கிடையே 58 வயதான சுனிதா வில்லியம்ஸ் 3ஆவது முறையாக நேற்று விண்வெளிக்குச் செல்ல இருந்தார். அந்தச் சூழலில் அவர் பயணிக்க இருந்த ‘போயிங் ஸ்டார்லைனர்’ (Boeing Starliner) விண்கலத்தில் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டது. Trendy Saree Draping Styles: "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.." வித்தியாசமான ஸ்டைலில் சேலை கட்டுவது எப்படி?.!

இதன் காரணமாக கடைசி நிமிடத்தில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) மற்றும் பேரி வில்மோர் என இருவரும் பத்திரமாக வெளியேறினர். உயர் ரக விண்கலமான போயிங் ஸ்டார்லைனரில் செல்லும் முதல் பெண் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைக்க இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், புதிதாக ஆக்சிஜன் குழாய் மாற்றப்பட்டு வருகின்ற 17 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் மேற்கொள்வார் என்று நாசா தெரிவித்துள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement