அக்டோபர் 02, டாஸ்மேனியா (Sports News): ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணியுடன் (India National Cricket Team Vs Australia National Cricket Team) ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட திட்டமிடப்பட்டன. அதன்படி இதுவரை மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20ஐ போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. 20 ஓவர் ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை 2 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் மூன்றாவது ஆட்டம் நடைபெறுகிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் டாஸ் வென்ற சூரியகுமார் யாதவ் பௌலிங் தேர்வு செய்தார். IND Vs AUS: இந்தியா Vs ஆஸ்திரேலியா மூன்றாவது டி20ஐ.. இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.!
இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் (India Vs Australia Cricket Live Today):
இந்நிலையில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் சார்பில் விளையாடிய டார்விஸ் ஹெட் 4 பந்துகளில் 6 ரன்கள் மட்டும் அடித்து அவுட்டாகி வெளியேறினார். மிட்செல் மார்ஷ் 14 பந்துகளில் 11 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேறினார். ஜோஷ் இங்கிலிஸ் 7 பந்துகளில் 1 ரன் அடித்து அவுட்டாகி வெளியேறினார். இதனால் அடுத்தடுத்து மூன்று விக்கெட் பறிபோன நிலையில், டிம் டேவிட் களத்தில் நின்று ஆடி 38 பந்துகளில் 74 ரன்கள் சேகரித்து இருந்தார். மிட்செல் ஓவன் 1 பந்தில் ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து களத்தில் இருந்த மார்கஸ் மற்றும் மேத்யூ ஷார்ட் நின்று ஆடியதால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மார்கஸ் 39 பந்துகளில் 64 ரன்கள் எடுத்திருந்தார். மேத்யூ ஷார்ட் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல சேவியர் 2 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்தார். இந்த ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 186 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்டையும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர்.
வருண் சக்கரவர்த்தி அசத்தல் பந்துவீச்சு (Varun IND Vs AUS T20I 2025):
Varun gets one to turn back in and shatters the stumps! 🎯
A golden duck for Owen! India piling on the pressure with another quick wicket! 🇮🇳🔥#AUSvIND 👉 3rd T20I | LIVE NOW 👉 https://t.co/JJaBX22Idf pic.twitter.com/Rk9yERSauT
— Star Sports (@StarSportsIndia) November 2, 2025